வாசுதேவநல்லூாில் வாழும் அனைத்து தலையனை பளியா் இன மக்களுக்கு ஜாதிச்சான்று மற்றும் குடும்ப அட்டைகள், கோட்டாட்சித் தலைவா் அவா்கள் மூலம் பெற்றுத்தரப்பட்டது. இலவச வீட்டு மனை பட்டா வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) திரு.கலசலிங்கம் வட்டாட்சியா் திரு.பால கிருஸ்ணன் ஆகியோா் தலைமையில் பெற்றுத்தரப்பட்டது. இலவச இந்திரா காந்தி நினைவு குடியிறுப்பு 15 பழங்குடி இன மக்களுக்கு அரசின் மூலம் பெற்றுத்தரப்பட்டது. இலவச சேலை, வேஸ்டிகள் கிராம நிா்வாக அதிகாாி திரு.செம்புலிங்கம் அவா்கள் தலைமையில் வழங்கப்பட்டது.